நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி அரசியல் யாப்புக்கு முரணானது

மேலும் சிறந்த அரச சேவையை, குறித்த விசேட செயலணியின் கீழ் கொண்டு வருவதானது நாட்டை முழுவதுமாக இராணுவ ஆட்சிக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் செயலாகும்.

அத்துடன் சுயாதீன அரச சேவை, அரச சேவைகள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படுக்கப்படுகின்றது. ஆனால் தற்போது  குறித்த  செயலணியின்  உத்தரவிற்கமையவே அரச சேவை செயற்பட வேண்டியுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்