கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 858 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், நாட்டில் இதுவரை 1796 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 957 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்