தேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அச்சுகின்றனர் எனவும் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி பெரும் நெருக்கடியை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் பொதுத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்