உலக சுற்றாடல் தினம்: மடுகந்தை சிறி தலதா விகாரையில் மரநடுகை…

வவுனியா, மடுகந்தை சிறி தலாதா விகாரையில் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மடுகந்தை சிறி தலதா விகாரை விகாராதிபதி மூஅட்டகம ஆனந்த தலைமையில் இவ் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் வவுனியாவில் முன்பள்ளி மாணவர்களின் வீடுகளிலும் ஒரு மரம் வீதம் மரநடுகை இடம்பெற்றிருந்தது.

இதில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பொலிஸ் அதிகாரிகள், முன்பள்ளி மாணவர்கள், நெல்சன் பவுண்டேசன் ஸ்தாபகர் செல்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மர நடுகையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறித்த மரநடுகை வேலைத்திட்டத்திற்காக நெல்சன் பவுண்டேசனால் 1500 தென்னங்கன்றுகள் மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்