வவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பொசன் வழிபாடுகள்…

வவுனியாவில் அமைதியான முறையில் பொசன் தின வழிபாடுகள் இடம்பெற்றன.

இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்பட்ட விசேட பொசன் தினம் இன்றாகும். இத்தினத்தில் பௌத்த விகாரைகளில் விசேட வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக அமைதியான முறையில் வவுனியாவில் உள்ள விகாரைகளில் பொசன் வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அந்தவகையில் மடுகந்தை சிறி தலதா விகாரையில் விகாராதிபதி மூவஅட்டகம ஆனந்த தலைமையில் பொசன் வழிபாடுகள் இடம்பெற்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் இடம்பெற்றன. இதன்போது தானமும் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், நெல்சன் பவுண்டேசன் ஸ்தாபர் நெல்சன், பொலிஸ் அதிகரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.