சஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம் உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுஜுவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சஜித், ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராகவே இன்னும் உள்ளார் என்றும் அவருடன் இருப்பவர்களும் ஐ.தே.க.வின் உறுப்பினர்களாகவே உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஐ.தே.க.வின் செயற்குழுவின் ஒப்புதலுடனே புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும் சுஜுவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.