இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.