சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிராஃபல்கர் சதுக்கத்தில் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தினார்.

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த விதிகள் உள்ளதாக, அவர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறார்கள் மற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதைப் பற்றி வலுவாக உணரும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்பது மிகவும் முக்கியம். ஆனால் நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் 2 மீட்டர் (6 அடி) இடைவெளியில் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கைகளை முழுமையாகவும் தவறாமலும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர்கள் கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்த வேண்டும்” என கூறினார்.

முன்னதாக புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பெரும்பான்மையானவர்கள் அமைதியாகவும், சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், மிகச் சிறிய அளவிலானோர் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.