சமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை!

இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஜூன் 15ஆம் திகதி முதல் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், பிரித்தானிய மருத்துவ சங்கம், மருத்துவர்கள் சங்கம், முகக்கவசங்களை போக்குவரத்துக்கு மட்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது.

இந்த விதிகளை அமுல்படுத்தினால் கொரோனா வைரஸிலிருந்து வரும் ஆபத்து மிகவும் குறையும் என அவர்கள் கூறுகின்றனர்.

பேருந்துகள், அமிழ் தண்டூர்தி (வசயஅள) ரயில்கள், விமானம் மற்றும் படகுகளில் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை சரி அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசங்கள் இல்லாமல் பயணிகள் ஒருவர் கூட பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள் சமூக தூரத்தை பின்பற்ற மிகவும் கடினமாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது தனிப்பட்ட விருப்பம் என்று வேல்ஸ் அரசாங்கம் கூறுகிறது.

போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘முடக்க நிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் தளர்த்தப்படும்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என கூறினார்.

இங்கிலாந்தில் ஜூன் 15ஆம் திகதி முதல், மேல்நிலைப் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் சில மாணவர்களுக்குத் திறக்கப்படும். அதே நேரத்தில் சமூக தொலைதூர விதிகளை அமுல்படுத்தினால் கடைகள் மீண்டும் திறக்கப்படலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.