உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்

முகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் சனநெரிசல் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

மேலும உடல் ரீதியாக முழு ஆரோக்கியம் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வெளியே சென்று வருவதற்கு முகக்கவசம் அத்தியாவசியமான ஒன்றாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்