இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் மன்னாரில் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு இரண்டு பேர் வந்த நிலையில், அவர்களை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வருகை தந்த இருவரும், மன்னார்- மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், அவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த இருவரும் எவ்வாறு மன்னாரிற்குள் வந்தார்கள் என அரச புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் படகு மூலம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர உதவிகளை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இராணுவத்தின் உதவியுடன் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த இருவரையும் அழைத்துவர பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் படகின் வெளி இணைப்பு இயந்திரம் போன்றவற்றை பொலிஸார் துள்ளுக்குடியிறுப்பு கடற்கரையில் இருந்து மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.