கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ தொற்றுக்கு உள்ளாகிய 898 பேர் வைத்தியசாலைகளில் தொடந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பதோடு, இந்த தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.