மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள மன்னார் புதிய பேருந்து நிலையம்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாளை (ஞாயிற்றக்கிழமை) உத்தியோக பூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின், சுமார் 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

குறித்த பேருந்து நிலையம், நாளை மதியம் 1 மணியளவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் நகர சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நேற்று முன்தினம் மதியம், மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் நகர சபையிடம் குறித்த பேருந்து நிலையம் கையளிக்கப்படும் நிலையில் பிரிதொரு தினத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு புதிய பஸ் நிலைய திறப்பு விழா நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது என மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்