இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் தற்போது 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இவ்வாறு வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லையென வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் S.சிவகுமார் தெரிவித்துள்ளார்

பாலைவன வெட்டுக்கிளி தாக்கம்  குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும்அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம எனுமிடத்தில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. இதை நாங்கள் எமது விவசாயத் திணைக்களம் மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பரிசோதித்தோம். இது ஒரு மஞ்சள் புள்ளிகள் கொண்ட ஒருவகை வெட்டுக்கிளி என அறிவித்திருந்தார்கள் இது வழமையாக இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளி இனமாகும் பாலைவன வெட்டுக்கிளியல்ல என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளால் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் எனினும் அதனை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை தாங்கள் முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.