பதுளையில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) மூவரும் நீராட சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (38), மகள்(12) மற்றும் மற்றொரு சிறுமி (13) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்