ஜேர்மனியில் சிக்கியிருந்த 235 இலங்கையர் மீண்டனர் கப்பல் பணியாளர்கள் எனத் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 235 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.55 மணியளவில் வந்தடைந்துள்ளனர்.

ஜேர்மனியில் கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றிருந்தபோது, கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், அந்நாட்டில் சிக்கியிருந்த 235 பேரே  இவ்வாறு இன்று வருகை தந்துள்ளனர்.

இச்சிவில் கப்பல் பணியாளர்கள், ஜேர்மனியின் ஹெம்பர்க் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1206 எனும் விசேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகளும், விமானப் பணியாளர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதற்காக கொழும்பு ஆசிரி வைத்தியசாலை பணியாளர்கள் மத்தள விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.