தேர்தல் திகதி அறிவித்தபின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

பொதுத்தேர்தலுக்கான சரியான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவித்தபின்பு வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் மேலும் கருத்து கூறுகையில் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வழமை போன்று இந்த பொதுத்தேர்தலிலும் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நாம் இறக்கியுள்ளோம்.

கொரோனா வைரஷ் தாக்கம் காரணமாக தேர்தல் எப்போது நடைபெறும் என்ற இழுபறி நிலை தொடர்ந்தகாரணத்தாலும் ஊரடங்கு சட்டம் சுகாதார நடைமுறைகள் சமூக இடைவெளி என சகல விடயங்களையும் சரியாக கடைப்பிடித்த ஒரு கட்சியாகவும் நமிழ்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பிரசாரங்களில் கூடிய அக்கறை காட்டவில்லை.

இருந்தபோதும் பாதிக்கப்பட்டமக்கள் வறுமைகோட்டில் வாழும் மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாத மக்கள், பெண்தலைமைத்துவ குடும்பம், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், குறைந்த வருமானத்தை பெறும் மக்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளின் நிமிர்த்தம் பல தரப்பட்ட நிவாரண உதவிகள் முடிந்தவரை வழங்கப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உரிய காலத்தினுள் தேர்தல் நடாத்தப்படாமை தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பில் தப்போது பொதுத்தேர்தல் நடத்தும் அதிகாரம் முழுமையாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதால் பொருத்தமான திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்து தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பாக கடைப்பிடிக்கும் நடைமுறைகளை பின்பற்றி தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரங்களை முழு அளவில் முன்எடுக்கும்.

எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதற்கு எமது மக்களை தயார்படுத்தி வீட்டுச்சின்னத்திற்கும் விரும்பிய வேட்பாளர்களின் இலக்கங்களுக்கும் புள்ளடி போடுவதற்கான விழிப்பூட்டல் பிரசாரங்களை சமூகவலைத்தளங்கள், துண்டுப்பிரசுரங்கள், சமூக இடைவெளியுடன் கூடிய சுகாதார நடைமுறைகளை அணுசரித்து கருத்தரங்குகளயும், வீடுவீடாக வேட்பாளர்கள் சென்று தெளிவூட்டல் பிரசாரங்களையும் தீவிரப்படுத்தும் வேலைத்திட்டத்தை்தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊரடங்கு சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி முன்எடுப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை இம்முறை தேர்தலில் கடந்த 2015, பொதுத்தேர்தலை விட குறைந்த அளவில்தான் அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன்.

2015, பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26, அரசியல் கட்சிகளும், 30, சுயேட்சை குழுக்களுமாக மொத்தம் 56, குழுக்களில் 448, பேர் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர் அதில் 30 சுயேட்சைகுழுக்களும் 22 அரசியல் கட்சிகளுமாக மொத்தம் 52 குழுக்கள் கட்டுப்பணத்தை கூட பெறவில்லை,
ஆக மூன்று கட்சிகளில் இருந்து 5, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.

இந்த 2020, பொதுத்தேர்தலில் 16,அரசியல் கட்சிகளும்,22சுயேட்சை குழுக்களுமாக மொத்தம் 38 குழுக்களை சேர்ந்த 304,வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 22,சுயேட்சைகுழுக்களும் கட்டுக்காசை இழக்கும் ஏனைய 16, அரசியல் கட்சிகளிலும் ஏறக்குறைய 12,அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறாமல் வேட்பாளர் விருப்பு வாக்கு எண்ணாமல் விடப்படும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னணிகட்சியாக அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக அறிவிக்கப்படும் நாம் நான்கு ஆசனங்களை பெறும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசாரங்களை முன்எடுப்போம் கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் மட்டும் நான்கு ஆசனங்களை பெற்ற அனுபவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமக்கு மட்டுமே உண்டு ஏனைய தேர்தல்களில் பொதுவாக மூன்று ஆசனங்களை நாமே தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவான 2001, ம் ஆண்டு தொடக்கம் பெற்றுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கவேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் வரும் வகையில் எமது பிரசாரங்களை முன்எடுப்போம்.

மட்டக்களப்பில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகும் நிலையில் இம்முறை 304, வேட்பாளர்கள் பல்வேறு கட்சி, சுயேட்சைகுழுக்களில் இறக்கப்பட்டாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலும் எட்டு வேட்பாளர்கள் உள்ளனர் இந்த எட்டுப்பேரும் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதில்லை எட்டுபேரில் நால்வர் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தமிழ்மக்கள் மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூடலடமைப்பின் இலங்கை தமிழரசு கட்சி வீட்டுச்சின்னத்திற்கு கட்டாயமாக ஒரு புள்ளடியும் தாம் விரும்பும் வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மூன்று வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை செலுத்தமுடியும், மூன்று பேருக்கு விரும்பாவிட்டால் இருவருக்கு அல்லது ஒருவருக்கு அவர்களின் இலக்கத்துக்கு விருப்பை தெரிவித்து புள்ளடி இடலாம்.

எட்டு வேட்பாளர்களுக்கு எவருக்கும் புள்ளடி விருப்பு தெரிவு செய்யவில்லை எனுனும் கட்சியின் சின்னமான வீட்டுச்சின்னத்துற்கு அனைத்து தமிழ்மக்களும் வாக்குகளை செலுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பின் பலத்தை சர்வதேச அரங்கில் காட்டவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்