தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அநுர கருத்து

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இன்னொரு தரப்புக்கு சாதகமான வகையிலும் கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அரசமைப்பு சபை கூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அநுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்தார்.

அதாவது, இவ்வாறான ஒரு நிலைமை காணப்படும் நாட்டில், ஒருபோதும் சுயாதீனத்தன்மையுடன் தேர்தல் இடம்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.