மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்திலே பங்கு தந்தையாக பணியாற்றிய  அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் புனித மரியாள் பேராலயத்தில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் நேற்று சனிக்கிழமை (06) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ;டிக்கப்பட்டது
படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின்  32 ஆவது நினைவேந்தல் மரியாலய தேவலாய பங்கு தந்தை வணபிதா சிலமன் அன்னதாஸ் தலைமையில்  நடைபெற்றது. இதில் படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தையின் உறவினர்கள் வணபிதாக்கள்  பொதுமக்கள் கலந்துகொண்டு திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டு சமாதியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலே பங்கு தந்தையாக பணியாற்றிய  அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகள் 1988 யூன் 6 ம் திகதி; 46 வயதிலே இனம்தெரியாத துப்பாக்கி தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகள் 1942 மட்டக்களப்பு புளியந்தீவு பெனாண்டே வீதியில் பிறந்தவர் 1970 ம் ஆண்டிலே கத்தோலிக்க திருமறைக்குள் அருட்தந்தையாக அபிஷேகம் செய்யப்பட்டு 1988 யூன் 6 வரை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலே பங்கு தந்தையாக பணியாற்றியவர்
ஒடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டோர் வறியவர்கள் தேவை நாடி நிற்போர்  என முழு சமூகத்துக்குமே சிறப்பு பணி செய்தவர் துணிந்த ஆழுமையும் நேரியல் சிந்தனையும் இளைஞர்களை உயரியல் சிந்தனையிலல் நெறிப்படுத்தும் ஆர்வமும் கொண்டவர் கத்தோலிக்க திருமறை பணியோடு வாழ்ந்தவர்
உள்நாட்டுபோர்  இலங்கையில் உக்கிரமடைந்த வேளையில் துணிந்து செயற்பட்டு சாதாரண மக்கள் இப்பேரின் வடுக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என தன்னை மாய்த்துக் கொண்டவர் சமாதானத்தின் காவலனாக தூதுவனாக முரண்பட்ட இரண்டு தரப்புக்கும் நடுவே நியாயமாக நடுவராக அன்பு பணிசெய்தவர்
எப்போதுமே நீதிக்காக குரல் கொடுத்தல் அந்த இடத்தில் பிரசன்னமும் இருந்துவிடும் அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகள் சமாதானபணி செய்தார் என்ற ஒரே செயற்பாட்டிற்காக இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளினால் 1988 யூன் 6 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட  இவர் மறைந்து 32 ஆண்டுகள் புரண்டேடிச் சென்றாலும் அவரின் நீதிக்கான அன்பு பணிக்கு நாமும் நாம் வாழுகின்ற சமூகமூம் அங்கீகாரம் கொடுத்திருக்கின்றது என்பது உண்மை அவரை பிரிந்த நேரம் சோகம்படிய இதயங்கள் எல்லாம் அவர் புகழைபாடி நிற்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.