உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸாரால் சிரமதானம்…

பாறுக் ஷிஹான்

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை இஸ்லாமிய றிலீப் குடியிருப்பு தொகுதியில் சிரமதான பணியினை  ஞாயிற்றுக்கிழமை(7) காலை  கல்முனை பொலிஸார் முன்னெடுத்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச். சுஜித் பிரியந்த தலைமையில்  சுற்றுச்சூழல் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல் . சம்சுதீன்,சமூக பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.வாஹிட்  வழிகாட்டலில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொலிஸாரும் .குடியிருப்பு மக்களுடன் சிரமதான நிகழ்வு மருதமுனை  இஸ்லாமிய றிலீப் குடியிருப்பு தொகுதியில் காலை  இடம்பெற்றது.
இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக ‘பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாப்போம்’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன்போது கோவில்கள், வடிகான்கள், வீதியோரங்கள் போன்ற இடங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை அதிரடிப்படை வீரர்கள் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.