இன்றுமுதல் தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்

தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல்தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அதன் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்