நாடாளுமன்றில் பெரும்பான்மை எமக்கே – ரோஹண லக்ஷ்மன்

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் உருவாக்கும் என்றும் தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்தல் தாமதமானாலும், வேட்பாளர்களின் விருப்ப எண்ணை வழங்குவது குறித்து அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்கப்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை வீடு வீடாக சென்று பிரசாரங்களை மேக்ற்கொள்வது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்