அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற டிப்பர்கள் : இருவர் கைது…

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச்சென்ற டிப்பர்களை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டிக்குளம் பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில் (05.06.2020) ஊடரங்கு சட்ட விதிமுறைகளை மீறியதுடன் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை ஒமந்தை பொலிஸார் கையக்கபடுத்தியுள்ளதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்றையதினம் (06.06.2020) பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இரு வாகனங்களும் நீதிமன்றித்தில் ஒப்படைப்பதற்காக ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்