கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டுவதால் காட்டு யானைகளினால் அச்சுருத்தல் அதிகரிப்பு…

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட   பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டுவதால்  காட்டு யானைகளினால் அச்சுருத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் சேருவில பிரதான வீதியின் சூரியபுர பகுதியில் கந்தளாய் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் பகல் மற்றும் இரவு வேளைகளில் யானைகளில் நடமாட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கந்தளாய் சேருவில வீதியில் பயணம் செய்வோரும் காட்டு யானைகளினால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கந்தளாய் பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பை கூழங்களை வேறு இடமான கங்கைப் பகுதியில் கொட்டுவதாக சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக கடந்த வருடம்  தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாது  பழைய இடத்திலே குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானைகளினால் உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கு முன்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.