தமிழ் மக்களிடம் மஹிந்தவுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை – சுப்பிரமணியம் சுவாமி

தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என இந்தியப் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை வானொலியொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என்பது தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.