வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் பங்கேற்றார் இராணுவ தளபதி
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார்.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்தது.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.
மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருந்த போதும் ஆலயத்தில் மக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆலயத்தை சூழ இராணுவத்த்தினர் குவிக்கப்பட்டிருந்ததோடு, நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்று மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
குறிப்பாக இவர் வருகைதந்து ஆலய வளாகத்தில் நின்றபோது விமானப்படையினர் ஆலயத்துக்கு உலங்குவானூர்தி மூலம் மலர் தூவியிருந்தனர்.
குறிப்பாக இந்த மலர் தூவும் செயற்பாடும் சில ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை