அமெரிக்க, சீன தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை

கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று(செவ்வாய்கிழமை) அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இந்தநிலையிலேயே இதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளிற்கு நஸ்டஈடு கோரி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சீனா தூதரகத்திற்கு முன்பாக நாளைய தினம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்