வவுனியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நோக்கி பயணித்த கார், அதிகாலை 1 மணியளவில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வீதிகரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காரை ஓட்டியநபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஓட்டிவந்த கார் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.