முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு

உடற்பயிற்சியின்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூக இடைவௌியை மாத்திரம் பேணுதல் போதுமானது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தனியாள் மற்றும் நடைபாதை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அதிக ஒட்சிசன் தேவைப்படுவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் அலுவலக பணியின்போதும் முகக்கவசம் அணிதல் கட்டாயமானதாகும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சன நெரிசலான இடங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமானது எனவும் அதனை இடைக்கிடை தொடவேண்டாம் எனவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்