உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து சிரமதான பணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த சிரமதான பணி 100க்கு மேற்பட்ட ஊழியர்களின் பங்குபற்றுதலுடன்  கண்டாவளை பிரதேச எல்லைக்குட்பட்ட பரந்தன் ஏ9 வீதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உக்காத பொருட்கள், பொலித்தீன் வகைகள் என தரம் பிரிக்கப்பட்டு ஏ9 வீதியின் இருமருங்கும் துப்பரவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், தர்மபுரம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்