வவுனியா அம்மாச்சி உணவகம் இன்று முதல் மீண்டும் திறப்பு

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் அம்மாச்சி உணவகம் இன்று (புதன்கிழமை) முதல் மீளவும் திறக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி அருந்ததிவேல் சிவானந்தன் தலைமையில் அம்மாச்சி உணவகத்தின் ஊழியர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இன்று முதல் மக்களிடையே சமூக இடைவெளிகளை பேணி அம்மாச்சி உணவகத்தை மீளவும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார நடைமுறையை பின்பற்றியும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அம்மாச்சி உணவகம் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் ஒரே ஒரு உணவகமாகும்.

இந்த உணவகம் மூடப்பட்டமையினால், பேருந்துகளிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் உணவு வகைகளை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தனர்.

மேலும் கடமைகளுைக்குச் செல்லும் அரச, தனியார் துறை ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் அம்மாச்சி உணவகத்தை மீளவும் திறக்குமாறு பல முறைப்பாடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்