கொரோனா வைரஸ்: சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினால் சீன தூதரகம் முன்பாக இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மீறப்படும் என கூறி கறுவாத்தோட்டம் பொலிஸார், நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதனைத் தொடர்ந்து இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்