பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை – குமார வெல்கம

நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை. ஆனால், கொரோனா அச்சம் நிலவிவரும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் எவ்வளவு தூரத்திற்கு வாக்களிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதான் எமது பிரச்சினை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்