ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான தடைகள் விரைவில் விலகும் தவிசாளரிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நம்பிக்கை

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான  தடைகள் விரைவில் விலகும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த பிரதேச சபையின் அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவு செய்வதற்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.  இந்த கலந்துரையாடலில்  பிரதேச மக்களின் நிலையை மனிதாபிமானத்தோடும் கருணையோடும் அணுகுமாறு தவிசாளரினால் கோரப்பட்டது. உதவிப் பணிப்பாளர்அதற்குப் பதிலளிக்கவில்லையில்  வயல்களில் மக்கள் தொடர்ந்தும் வயல் செய்ய முடியும் எனவும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை குத்தகை அடிப்படையில் செய்வதற்கும் அனுமதி வழங்குவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் பயிர்ச்செய்கை செய்வதற்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் தவிசாளருடன் உப தவிசாளர்  சி.தவபாலன் அவர்களும் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.