ஏழு உயிர்களை பலிகொடுத்தும். வீதி 25 வருடமாகியும் சீர் செய்யப்படவில்லை பொது மக்கள் கவலை…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு செல்ல 25 தோட்டங்களை உள்ளடக்கிய வீதியான நிவ்டன் வீதி கடந்த 25 வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் குறித்த வீதியில் கர்பிணித்தாய்மார்களை கொண்டு செல்லும் போது இடையிலேயே பிரசவமாகி 07 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் குறித்த வீதி இதுவரை சீர் செய்யாமல் இருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் பொகவந்தலாவை,புளியாவத்தையினை இணைக்கும் இந்த  வீதி சுமார் 05 கிலோ மீற்றர் தூரமே உள்ளது. இந்த வீதியினை போடைஸ்.புளியாவத்தை,சாஞ்சிமலை,நிவ்டன்,உள்ளிட்ட 25 தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக குறித்த வீதியினையே பயன்படுத்துகின்றனர்.

எனினும் குறித்த வீதி எவ்வித புனரமைப்புமின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் இந்த வீதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் புளியாவத்தை போடைஸ் சாஞ்சிமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கு பதிலாக சுமார் 10 கிலோ மீற்றர் டிக்கோயா வழியாக சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வாகன கூலியாக 1800 ரூபாய் வரை செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நேரத்திற்கு வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு செல்ல முடியாது போனதன் காரணமாக பலர் இறந்துள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே நேரம் இவ்வீதியினை பயன்படுத்தும் டிக்கோயா நுண்கலை கல்லூரி நோர்வூட் அயரபி உள்ளிட்ட பிரதான பாடசாலைக்கு செல்லும்  சுமார் 200 மேற்பட்ட பாடசாலை மாணவர்களும்,கிளினிக் செல்லும்  கர்பிணித்தாய்மார்களும் வயோதிபர்களும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் குறித்த வீதியில் பாரிய கற்கள் தோன்றியுள்ளதனாலும் பாரிய குழிகள் காணப்படுவதனாலும் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
குறித்த வீதியில் அவசரத்திற்கு ஒரு நோயாளி கொண்டுவருதென்றாலும் முச்சக்கவண்டி சாரதிகள் வர மறுக்கின்றனர் அது மாத்திரமின்றி அந்த வீதி சீரின்மை காரணமாக அதிக பணம் அறிவிடுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியினை புனரமைத்து தருமாறு பல அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தேர்தல் காலங்களில் இந்த வீதியினை புனரமைத்து தருவதாக வாக்களிக்குமாறு கோரி வாக்குகளை பெற்று சென்றவர்கள் தேர்தல் வெற்றிபெற்றபின் அந்த பக்கம் கூட வருவதில்லை என இவர்கள் குற்றம் சுமத்துவதுடன் எதிர்வரும் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டி இருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் மிக குறைந்த வருமானம் பெறும் தோட்ட மக்கள் தங்களுடைய வைத்திய தேவைகளை குறைந்த செலவில் நிறைவேற்றி கொள்ள வழிசமைத்து கொடுக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை பொறுப்புமாகும் என்பது குறிப்பிடத்தக்கது,
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.