இலங்கையில் வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை

நாட்டின் சில பாகங்களில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வேதியியல் முறைமை உள்ளிட்ட ஏனைய சில முறைகள் குறித்து விவசாயிகளை தெளிவூட்டுவதன் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியும் என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டபிள்யு வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவத்தகம பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. மஞ்சள் நிற புள்ளிகளைக் கொண்ட அந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த வெட்டுக்கிளிகள், அதன் பின்னர் கிளிநொச்சி, மாவனெல்லை, மாத்தறை, வலஸ்முல்ல முதலான பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, விவசாய திணைக்களம் இந்த விடயத்தில் அதிக அவதானம் செலுத்தியது.

இந்த நிலையில், வெட்டுக்கிளிகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்