தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் இடம்பெற்றன.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு பகுதியினரை அடக்கம் செய்த சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன் போது குறித்த தாக்குதலில் தன்னுடைய நான்கு பிள்ளைகளை பறிகொடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து புஸ்பராசா என்கின்ற தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர் வணக்கமும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் கனகராசா ஜீவராசா மற்றும் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் குழுத் தலைவர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.