ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு நாமல் கண்டனம்

அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகிலும் லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் பிலொய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும் லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் ஆற்றப்பட்ட சேவைகள் இவ்வாறு ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்