கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை 1868 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 707 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை