மடுத் திருத்தலத்தின் ஆடி மாதத் திருவிழாவிற்கான முன்னாயத்தம் குறித்து கலந்துரையாடல்!

மன்னார் மறைமாவட்ட ஆயரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

திருவிழா முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மேலதிக அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பொலிஸ், இராணுவம், கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழா நடைபெறும் நிலையில் முன்னேற்பாடுகள், சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், திருவிழாவின் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட உள்ளதோடு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திருவிழா நடைபெறும் எனவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்