வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பு

பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அமைச்சர் விமல் வீரவன்ச பனை அபிவிருத்தி சபைக்கு அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதியில் அழிவுற்ற பனை வளங்களை மீளவும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் ஊடாக தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பினை பனை அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் ஊடாக சுய தொழில் கடன்களைப் பெற்று அவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

பனை மரம் சார் உற்பத்திகளான ஜஸ்கீறீம், யோகட், பிஸ்கட் போன்ற உற்பத்திகளை அதிகரிக்க அமைச்சர் ஆலோசணை வழங்கியுள்ளார். அந்த உற்பத்திப் பொருட்கள் வெகு விரைவில் வடமாகாணத்தில் உற்பத்தி செய்யவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றின் ஊடாக சந்தை வாய்ப்பு, தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனைசார் உற்பத்திப் பொருட்களை ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது தொடர்பாக தற்பபோது அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

மேலும், உள்ளுர் உற்பத்திகளை சதொச, கீல்ஸ், காகில்ஸ் போன்ற சுப்பர் மார்க்கெற் ஊடாக விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு நகரத்தில் உள்ள சுப்பர் மார்க்கெற்றுகளில் வடமாகாண பனை சார் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.