மக்கள் எதிர்பார்த்தது போன்று ஐ.தே.க. வேட்பாளர்களில் அதிகளவில் புது முகங்கள்- ஆசு மாரசிங்க
மக்கள் எதிர்பார்த்தது போன்று புதிய உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான சந்தரப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை முறையாக செயற்படுத்தக் கூடிய சிறந்த தலைமைத்துவத்தை ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே வழங்கமுடியும். அவரே ஐ.தே.க.வின் பிரதம வேட்பாளர்.
கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தனர். அதற்கமைய இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவில் புதுமுகங்களையே தேர்தலில் களமிறக்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 291 வேட்பாளர்கள் இவ்வாறு போட்டியிடவுள்ளனர். மக்கள் எதிர்பார்த்தைப் போன்று இம்முறை புதிய முகங்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஐ.தே.க. வழங்கியுள்ளது. இந்நிலையில் இவர்களிலிருந்தே 225 உறுப்பினர்களையும் மக்கள் தெரிவு செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை