6 உறுப்பினர்களுக்காக வன்னியில் 477 வேட்பாளர்கள் களத்தில் குதிப்பு

வன்னித் தேர்தல் மாவட்டத்தில்  6 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 19 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றிலிருந்து 477 பேர் போட்டியிடுகின்றனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. அதற்கமைய வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சைக் குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இலங்கைத் தமிழரசுகட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, இலங்கை சோசலிசகட்சி, ஜனநாயக இடதுசாரி முண்ணனி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனசெதபெரமுன, சிங்கள தீப ஜாதிகபெரமுன, தமிழர் ஜக்கிய சுதந்திர முண்ணனி, தேசிய மக்கள் சக்தி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, மௌவிம ஜனதாகட்சி, ஜக்கிய தேசியக் கட்சி, எக்சத் பெரமுன, ஜக்கிய மக்கள் சக்தி, தமிழர் விடுதலை கூட்டணி, முன்னிலை சோசலிசகட்சி, எங்கள் மக்கள் சக்தி ஆகிய 19 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சை குழுக்களும் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.