ரணில் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுகிறார்- பவித்ரா

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் 230 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுகிறாரென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில்அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் ரணில் இவ்விடயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகின்றார்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு 230 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியுள்ளது.  குறித்த நிதி தொடர்பில் சுகாதார அமைச்சர்  தெளிவுபடுத்த வேண்டும் என அண்மையில் ரணில்  கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்