ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து – லால் விஜயநாயக்க

ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு வெளியே அமைப்புகளை உருவாக்குவதற்குமான முயற்சி இதுவென்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினர் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய, பரந்துபட்ட அதிகாரங்களை உடைய செயலணி உருவாக்கம் குறித்து ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயலணியின் உருவாக்கத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், குறித்த காரணங்களை பிரதமர், அமைச்சர்கள் பொதுச்சேவை மற்றும் நீதித்துறை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எனவும் வர்ணித்துள்ளார்.

இது இலங்கையின் அரசமைப்பின் கீழ் நாட்டை நிர்வகிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கை இழப்பிற்கான அறிவித்தலிற்கு சமமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.