கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இவ்வாறு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை