இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு…

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த  7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து பொலிசார் ஊடாக இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கு சென்ற நிலையில் கொவிட் 19 தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த பலர் அரசாங்கத்தினால் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பாட்டிருந்தனர்.

அந்தவகையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பி மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை வவுனியாவிற்கு அழைத்து வந்த இராணுவத்தினர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பொலிசார் அவர்களது பதிவு விபரங்களை மேற்கொண்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்