தேர்தல் விதிமுறைகளை மீறி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது. தலைமன்னாரில் சம்பவம்.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

தேர்தல் விதிமுறைகளை மீறி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்
சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில்
விடுவிக்கப்பட்டனர்.

இவ் சம்பவம் புதன் கிழமை இரவு (10.06.2020) தலைமன்னார் பியர் பகுதியில்
இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சம்பவம் அன்று மன்னாரைச் சார்ந்த
இருவரும் பேசாலை பகுதியைச் சேர்ந்த இருவருமாகிய நான்கு நபர்கள் ஒரு
வாகனத்தில் சென்று இரவு எட்டு மணியளவில் தலைமன்னார் பியர் கடற்கரைப்
பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகளை ஒட்டிக்
கொண்டிருந்தபொழுது தலைமன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின் இவர்கள் நான்கு பேரின் விடுதலைக்காக தலைமன்னார் பொலிசில் சட்டத்தரனி
எஸ்.டினேசன் முன்னிலையானதைத் தொடர்ந்து இவர்கள் நான்கு நபர்களும் பொலிஸ்
பிணையில் செல்ல அனுமதிக்க்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக மன்னார்
நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும்
தலைமன்னார் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்