காரைதீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் கட்டடத் திறப்புவிழா…

காரைதீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் அலுவலக கட்டிடமானது இன்று (10.06.2020)சங்கத்தின் தலைவர் யோகரெத்தினம் கோபிகாந் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
காரைதீவு 12 ம் பிரிவு பிரதான வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதியினை புனரமைப்பு செய்யப்பட்டு சங்கத்தின் செயற்பாட்டிற்கு தலமை அலுவலகமாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜா,மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் .எம் ஜீனைதீன் மற்றும் காரைதீவு பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்எம்.எ.எம் அன்வர் மேலும் கல்முனை பிராந்திய கூட்டுறவு உத்தியோகத்தர்களும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்