நல்லாட்சியா? படுகொலையாட்சியா? ஆகஸ்ட் 5இல் மக்கள் தீர்மானிக்கட்டும்  ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

“இலங்கையில் நல்லாட்சி வேண்டுமா? அல்லது படுகொலையாட்சி வேண்டுமா? என்பதை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்சக்களின் ஆட்சி என்றால் படுகொலைகள் நிறைந்த ஆட்சி என்று எல்லோருக்கும் தெரியும். பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும்கூட நாட்டில் படுகொலைகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் அரங்கேறுகின்றன.

எனவே, நல்லாட்சி வேண்டுமா? அல்லது படுகொலையாட்சி வேண்டுமா? என்பதை ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் தவறவிடக் கூடாது.

அனைத்து வாக்காளர்களும் ஆகஸ்ட் 5ஆம் திகதி தமது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற வேண்டும்.

தற்போதைய நிலைமையில் நல்லாட்சியைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்